கனடாவில் கொடூரச் சம்பவம் - 13 மாத குழந்தையை அடித்து கொன்ற தந்தை
28 மாசி 2024 புதன் 08:59 | பார்வைகள் : 10152
கனடாவில் சஸ்கட்ச்வானின் பிரின்ஸ் அல்பர்ட் பகுதியைச் சேர்ந்த காயிஜ் ப்ராஸ் என்ற நபருக்கு 13 மாதங்களான சிசுவொன்றை அடித்துக் கொன்ற தந்தைக்கு நீதிமன்றம் பதினாறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 13 மாதங்களான டான்னர் ப்ராஸ் என்ற சிசுவை குறித்த நபர் கடுமையாக தாக்கியுள்ள நிலையில் சிசு உயிரிழந்துள்ளது.
இந்த பாதகச் செயலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது ப்ராஸ் மது போதையில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan