ஈஃபிள் கோபுரத்தில் சிக்கிக்கொண்ட ஊழியர்கள்! - இரவு முழுவதும் போராட்டம்!
28 மாசி 2024 புதன் 09:54 | பார்வைகள் : 5201
ஈஃபிள் கோபுர ஊழியர்கள் கோபுரத்துக்கு நடுவே சிக்குண்டு இரவு முழுவதும் தவித்துள்ளனர். இச்சம்பவம் இடமெப்ற்று பத்து நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போதே வெளியாகியுள்ளன.
ஈஃபிள் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் பயணிபுரியும் ஊழியர்கள் மூவர், பெப்ரவரி 16 - 17 ஆம் திகதிக்குட்பட்ட இரவில், கோபுரத்தில் இருந்து கீழே இறக்க முற்பட்டனர். பாரம்தூக்கியில் அவர்கள் கீழிறங்க முயற்சித்த வேளையில் அவர்கள் பாரம்தூக்கிக்கிக்குள் சிக்கிக்கொண்டனர். பாரம் தூக்கி இயங்க மறுத்தது.
அதிகாலை 3.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை அவர்கள் அங்கு சிக்கிக்கொள்ள நேர்ந்தது.
தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்ட போதும், மீண்டும் பணி மிகுந்த சவாலாக இருந்தது. கிட்டத்தட்ட நான்கரை மணிநேரங்களின் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.