சீனாவில் சர்க்கஸில் நிகழ்ச்சியில் பயங்கர விபத்து! அலறிய பார்வையாளர்கள்
28 மாசி 2024 புதன் 10:29 | பார்வைகள் : 5401
சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
கடந்த வியாழனன்று, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றின்போது ஒரு பையனும் பெண்ணும் கயிற்றில் தொங்கியபடி நடனமாடும் விளையாட்டு வித்தையை நிகழ்த்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
இனிய இசையின் பின்னணியில் இருவரும் சுழன்று ஆட, இறுதியில், ஒருவர் தன் கயிற்றை விட்டுவிட்டு மற்றவருடைய கயிற்றைப் பிடித்துக்கொள்ளவேண்டும்.
இந்த விளையாட்டு வித்தையில், பட்டுத்துணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிள்ளைகள் துணியைப் பிடித்தபடி சுற்றி சுற்றிவர, கடைசி நேரத்தில், திடீரென அந்த துணியை மேலே உள்ள கம்பியுடன் இணைத்திருந்த இணைப்பு அறுபட, இருவரும் பல அடி உயரத்திலிருந்து தொபீர் என கீழே விழுந்திருக்கிறார்கள்.
இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சியைக் கண்ட பார்வையாளர்கள் அலறி சத்தமிட, உடனடியாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், கீழே விழுந்ததில், அந்த இருவரில் ஒருவனான 13 வயது பையனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விளையாட்டு வித்தையில் நிபுணரான Mr Zhang என்பவர் கூறும்போது, முன்பெல்லாம், இதுபோன்ற விளையாட்டு வித்தைகளில், அந்தக் கயிற்றை மேலே நிற்பவர்கள் பிடித்து, மேலிருந்தபடி அதைக் கட்டுப்படுத்துவார்கள்.
என்னவோ தெரியவில்லை, இப்போதெல்லாம், சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் இதுபோல் விபத்துக்கள் நடப்பதைக் குறித்து அடிக்கடி கேள்விப்படவேண்டிவருகிறது என்கிறார்.