நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட அவசரகால உதவிகளை காஸாவுக்கு அனுப்பிவைத்த பிரான்ஸ்!
28 மாசி 2024 புதன் 11:23 | பார்வைகள் : 5467
நோயாளர் காவு வண்டிகள் (ambulances) உள்ளிட்ட அவசரகால தேவைகள் காஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
75 தொன் எடையுள்ள உலர் உணவுகள், 10 நோயாளர் காவு வண்டிகள், 300 குடும்பங்களுக்கான கூடாரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கட்டார் விமானம் ஒன்றினூடாக காஸாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பரிசுக்கு வருகை தந்த கட்டாரின் மன்னன் Bin Hamad Al Thani ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் இரவு உணவை பகிர்ந்துகொண்டார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார், அங்கு யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவர முயன்று வருகிறது.
காஸா பகுதிக்கு தேவையான உதவிப்பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் கவனம் செலுத்திய நிலையில், நேற்று கட்டாருக்குச் சொந்தமான விமானத்தில் மேற்படி பொருட்களை அனுப்பி வைத்தது.