சமூக வலைத்தளங்களில் சட்டவிரோத தகவல்கள் பகிர்வது அதிகரிப்பு!
28 மாசி 2024 புதன் 17:37 | பார்வைகள் : 5821
சென்ற 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சமூகவலைத்தளங்களில்ன் சட்டவிரோத தகவல்கள் பகிர்வது அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டார்.
அடிப்படைவாத கருத்துக்கள், யூதமதம் மீதான எதிர்ப்பு கருத்துக்கள் போன்றன அதிகரித்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் இது தொடர்பாக 211,543 குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றதாக உள்துறை அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டார். இந்த குற்றச்சாட்டுக்களில் பெரும்பான்மையானது யூதமத எதிர்ப்பு தாக்குதல்களாகும். கிட்டத்தட்ட 90% சதவீதமானவை யூத எதிர்ப்பு கருத்துக்கள் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
குறிப்பாக X வலைத்தளத்தில் (முன்னாளில் Twitter என அழைக்கப்பட்ட) அதிகளவான இந்த விரோத கருத்துக்கள் பகிரப்படுகிறது. குறித்த தளத்தில் தணிக்கை விடயங்கள் மிகவும் சொற்பமாக இருப்பதை அடுத்து, இதுபோன்ற கருத்துக்கள் அதிகளவில் பகிரப்படுவதாகவும் தெரிவிதார்.
2023 ஆம் ஆண்டில் இது தொடர்பாக 211,543 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் 175,924 ஆக பதிவாகியிருந்தது.