மகளிர் கால்பந்து உலகக்கோப்பை - ஜில் ரூர்ட் சாதனை
6 ஆவணி 2023 ஞாயிறு 08:30 | பார்வைகள் : 3667
மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
Allianz மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நெதர்லாந்து வீராங்கனைகள் துடுப்புடன் செயல்பட்டனர்.
ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஜில் ரூர்ட் தலையால் முட்டி கோல் அடித்தார்.
இதன்மூலம் ஒரே உலகக்கோப்பையில் 4 கோல்கள் அடித்த முதல் டச்சு வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு பதிலடியாக தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் கோல் அடிக்க முயன்றனர். ஆனால் நெதர்லாந்து கோல் கீப்பர் டொம்செலார் அவர்களது முயற்சிகளை தவிடு பொடியாக்கினார்.
இதற்கிடையில் 68வது நிமிடத்தில் நெதர்லாந்துக்கு லினெத் மூலம் இரண்டாவது கோல் கிடைத்தது.
தென் ஆப்பிரிக்க கோல் கீப்பரின் தவறினால் இந்த கோல் சாத்தியமானது. அதன் பின்னர் இறுதிவரை தென் ஆப்பிரிக்காவால் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. தோல்வியால் தென் ஆப்பிரிக்க அணி தொடரை விட்டு வெளியேறியது.
11ஆம் திகதி நடக்க உள்ள முதல் காலிறுதியில் நெதர்லாந்து அணி பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.