Paristamil Navigation Paristamil advert login

சம்பள ஒப்பந்தம்... இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்

சம்பள ஒப்பந்தம்... இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்

29 மாசி 2024 வியாழன் 08:20 | பார்வைகள் : 2125


ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை சம்பள ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.

இதனையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தத்தையும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. 

அதிகபட்ச சம்பளமான ஏ ப்ளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு 7 கோடி ரூபாய் கொடுக்கப்படும். அந்த வகையில் அணித்தலைவர் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் ஏ ப்ளஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

கிரேட் ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும். 

இதில் தமிழக வீரர் அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ் ,கே எல் ராகுல், கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கிரேட் பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும். 

நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

குரூப் சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

அதில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சர்துல் தாக்கூர், சிவம் துபே, ரவி பிஷ்னாய், ஜிதேஷ் சர்மா வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், ஆர்ஸ்தீப் சிங், கே எஸ் பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.

சம்பள ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆகாஷ் தீப், விஜயகுமார் விசாக், உமர் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா போன்ற வீரர்களுக்கு சிறப்பு ஒப்பந்தத்தை வழங்க தேர்வு குழு பரிந்துரை செய்திருப்பதாக பிசிசிஐ கூறி இருக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்