லெபானனிற்குள் தரைவழியாக நுழைய திட்டமிட்டுள்ள இஸ்ரேல்
29 மாசி 2024 வியாழன் 11:03 | பார்வைகள் : 4782
ஹெஸ்புல்லா அமைப்பை இஸ்ரேலுடனான வடபகுதி எல்லையிலிருந்து அகற்றுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்காவிட்டால் இஸ்ரேல் வசந்தகாலத்தின் பிற்பகுதியில் அல்லது கோடைகால ஆரம்பத்தில் லெபனானிற்குள் தரைவழியாக நுழைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு வருகின்றது என வெளியான தகவல்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் புலனாய்வாளர்கள் மத்தியில் கவலை நிலவுகின்றது.
சிஎன்என் இதனை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு புலனாய்வு பிரிவினர் இஸ்ரேல் லெபனானிற்குள் தரைவழியாக நுழையலாம் என்பது குறித்து தகவல்களை வழங்கியுள்ளனர்.
கோடைகாலத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை ஆரம்பிக்கும் என புலனாய்வு பிரிவினரின் தகவல்களை பெற்றுக்கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் இஸ்ரேல் இராணுவநடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற அடிப்படையிலேயே நாங்கள் செயற்படுகின்றோம் என பைடன் நிர்வாகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லெபானை இலக்குவைத்து இஸ்ரேல் தரைவழிதாக்குதலை மேற்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன எனவும் அவர் தெரிpவித்துள்ளார்.
பலமாதங்களாக இஸ்ரேலிற்கும் லெபானனிற்கும் இடையில் இடம்பெறும் நாளாந்த பயங்கரமான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான லெபான் மற்றும் இஸ்ரேலிய மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் விமான ரொக்கட் ஆளில்லா தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது .
அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பினர் ரொக்கட் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.