தலைமன்னார் 10 வயது சிறுமி கொலை: ஐவரிடம் விசாரணை!
29 மாசி 2024 வியாழன் 12:07 | பார்வைகள் : 13441
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியல் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத், வியாழக்கிழமை (29) வழங்கினார்.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பெப்ரவரி 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரை கடந்த 19 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் வியாழக்கிழமை(29) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது உயிரிழந்த சிறுமியின் தாய்,தந்தை,அம்மம்மா உள்ளிட்ட 5 பேரிடம் நீதவான் விசாரணைகளை மேற் கொண்டார்.
குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் வழக்கு விசாரணையையும் அன்றைய தினத்துக்கு தவணையிட்டார்.


























Bons Plans
Annuaire
Scan