Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சிறையில் உள்ள கணவருக்கு கோழி இறைச்சி எடுத்துச்சென்ற மனைவி கைது

இலங்கையில் சிறையில் உள்ள கணவருக்கு கோழி இறைச்சி எடுத்துச்சென்ற மனைவி கைது

29 மாசி 2024 வியாழன் 16:34 | பார்வைகள் : 8855


களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு வழங்குவதற்காக மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் எடுத்துச்சென்ற மனைவி நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பயாகலை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணாவார்.

இவர் 6 வயது சிறுமியுடன் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரை பார்வையிட சென்ற போது கணவருக்காக எடுத்து சென்ற கோழி இறைச்சி பொதியில் கோழி இறைச்சி எலும்புகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைத்து கொண்டு சென்றுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண்ணிடம் இருந்து 550 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்