Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் முச்சக்கரவண்டியில் தாயின் கையிலிருந்து விழுந்த ஒரு மாதக் கைக்குழந்தை

இலங்கையில் முச்சக்கரவண்டியில் தாயின் கையிலிருந்து விழுந்த ஒரு மாதக் கைக்குழந்தை

1 பங்குனி 2024 வெள்ளி 13:30 | பார்வைகள் : 3164


ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தாயின் கையிலிருந்து தவறி விழுந்த நிலையில் ஒரு மாத குழந்தையொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று கிதுல்கல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று மீண்டும் நீர்கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, ​​கித்துல்கல குருமெடிய பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்த தாயின் கையில் இருந்த குழந்தை தவறி வீதியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் தாய் நித்திரையில் இருந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்

நேற்று இரவு 11.35 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அதே வீதியில் முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து சென்ற கார் ஒன்று, வீதியில் விழுந்து கிடந்த குழந்தையை கண்டு வாகனத்தை மீண்டும் திருப்பிச் சென்று சோதனையிட்டுள்ளது.

பின்னர் காரில் இருந்தவர்கள் கைக் குழந்தையை கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்ததுடன், பொலிசார் உடனடியாக குழந்தையை கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் குழந்தை இல்லாததை அறிந்த முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் திரும்பிச் சென்று வீதியில் தேடிய போது குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தாய் மற்றும் குழுவினர் கித்துல்கல வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில், குழந்தையை தாயுடன் உடனடியாக கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளில் குழந்தை எவ்வித பாதிப்பும் இன்றி பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் இன்று கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, மாத்தறை பகுதியைச் சேர்ந்த சூரியஆராச்சிகே ருவன் ரஞ்சித் குமார என்ற நபரே வீதியில் கிடந்த சிசுவைக் கண்டு உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்