Paristamil Navigation Paristamil advert login

வெர்சாய் மாளிகையில் மாபெரும் சந்திப்பு! - பல்வேறு போக்குவரத்து மாற்றம்!

வெர்சாய் மாளிகையில் மாபெரும் சந்திப்பு! - பல்வேறு போக்குவரத்து மாற்றம்!

1 பங்குனி 2024 வெள்ளி 13:59 | பார்வைகள் : 4600


’வெர்சாய் மகாசபை கூட்டம்’ ( réunion du Congrès) வரும் திங்கட்கிழமை வெர்சாய் மாளிகையில் இடம்பெற உள்ளது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், செனட் சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என மொத்த அரசும் ஒரே இடத்தில் கூட உள்ளது.

இந்த மாபெரும் கூட்டம் இடம்பெறுவதை அடுத்து, வெர்சாய் மாளிகையை சுற்றி பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு முதல் வரும் திங்கட்கிழமை இரவு 9 மணி வரை Place Gambetta, rue de la Chancellerie, as well as on avenues de Paris, de Sceaux மற்றும் de Saint-Cloud ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் திங்கட்கிழமை மாலை 9 மணி வரை l'Indépendante Amérique, Saint-Julien, Pierre de Nolhac மற்றும் des Récollets ஆகிய வீதிகள் முற்று முழுதாக மூடப்படுகின்றன. எந்த வித வாகனங்களும் அங்கு நுழை தடை விதிக்கப்பட்டும்.

மேலும், திங்கட்கிழமை காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை Place Gambetta, rue de la Chancellerie, avenues Nepveu Sud, Rockefeller மற்றும் de Sceaux ஆகிய வீதிகளும் மூடப்படுகின்றன.

***

மேற்படி இந்த கூட்டத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உட்பட 926 பேர் மொத்தமாக கலந்துகொள்ள உள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்