காஸாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 112 பேர் பலி! - விசாரணைகளுக்கு கோரும் பிரான்ஸ்!
1 பங்குனி 2024 வெள்ளி 14:13 | பார்வைகள் : 5571
நேற்று வியாழக்கிழமை காலை காஸா பகுதியில் உணவு விநியோகம் ஒன்றின் போது ஏற்பட்ட நெரிசலில் 112 பேர் பலியானதாகவும், 760 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை சர்வதேச நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்ததன் படி, கூட்ட நெரிசலில் சிக்கியும், மிதிபட்டும் 112 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அங்கு ஏற்பட்ட குழப்பத்தில் இருந்து சாரதிகள் வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், பலர் வாகனத்துக்குள் சிக்கி கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் உண்மையான நிலவரம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
30 கனரக வாகனங்கள் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணைகள் தேவை என்பதை பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் Stéphane Séjourné இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை தெரிவிக்கையில், "என்ன நடந்தது என்பதை தீர்மானிக்க ஒரு சுயாதீன விசாரணை தேவைப்படும்” என தெரிவித்தார்.