Paristamil Navigation Paristamil advert login

ராகி சப்பாத்தி

ராகி சப்பாத்தி

1 பங்குனி 2024 வெள்ளி 15:23 | பார்வைகள் : 2052


சத்துக்கள் நிறைந்த ராகி மாவு வீட்டில் இருந்தால் போதும் ஆரோக்கியமான காலை உணவை 10 நிமிடங்களில் தயார் செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள் :

ராகி மாவு - 1 கப்

எண்ணெய் - தேவைக்கேற்ப

தண்ணீர் - 3/4 கப்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து 3/4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஒரு கப் ராகி மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி கொள்ளுங்கள்.

கட்டிகள் வராமல் ராகி மாவை சில நிமிடங்கள் கிளறி இறக்கி ஆறவிடவும்.

ராகி மாவு சூடு ஆறியதும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு தட்டில் சிறிதளவு ராகி மாவை கொட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

பிசைந்து வைத்துள்ள ராகி மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருட்டி ராகி மாவில் புரட்டி எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதை சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து சப்பாத்தி ரெடி செய்துகொள்ளவும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் எண்ணெய் தடவி ராகி சப்பாத்தியை அதில் போட்டு சுட்டு கொள்ளுங்கள்.

ஒருபுறம் நன்றாக வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்து சுட சுட அனைவருக்கும் இந்த ஆரோக்கியமான ராகி சப்பாத்தியை பரிமாறுங்கள்.

இந்த ராகி சப்பாத்தியை தேங்காய் சட்னி, தக்காளி தொக்குடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்