அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்திக்கும் ஜனாதிபதி!
1 பங்குனி 2024 வெள்ளி 19:11 | பார்வைகள் : 18184
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அனைத்து கட்சித்தலைவர்களையும் வரும் வியாழக்கிழமை சந்திக்கிறார்.
இரஷ்ய-உக்ரேன் யுத்தம் தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்றுக்காக இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. அனைத்து கட்சித்தலைவர்களும், அரசியல் தலைவர்களும்க் இதில் பங்கேற்க உள்ளனர்.
உக்ரேனுக்கு பிரெஞ்சு இராணுவம் அனுப்பப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ‘தேவை ஏற்பட்டால்.. இராணுவம் அனுப்பபடும்’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த சந்திப்பு அது தொடர்பாகவே இருக்கும் எனவும் அறிய முடிகிறது.
ஜனாதிபதி மாளிகையான எலிசேயில் இந்த சந்திப்பு வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் இடம்பெற உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan