Paristamil Navigation Paristamil advert login

உங்கள் செல்லப் பிராணிகளை வயோதிபர் இல்லங்களுக்கு எடுத்து செல்ல அரசு அனுமதி.

உங்கள் செல்லப் பிராணிகளை வயோதிபர் இல்லங்களுக்கு எடுத்து செல்ல அரசு அனுமதி.

2 பங்குனி 2024 சனி 08:35 | பார்வைகள் : 5142


முதுமை காரணமாக வயோதிபர் இல்லங்களுக்கு செல்லும் முதியவர்கள், தாங்கள் வளர்த்த செல்லப்பிராணிகளை கைவிட்டு செல்லவேண்டிய நிலையே இதுவரை காலமும் பிரான்சில் நடைமுறையில் இருந்து வந்தது. இதனால் பல முதியவர்கள் மிகுந்த துயரத்தை அனுபவித்து வந்தனர். தங்களின் பிள்ளைகளை விடவும் அதிக அன்பு காட்டிய அவர்களின் செல்லப்பிராணிகளை கைவிட்டு செல்லவேண்டிய நிலை அவர்களை மனதளவில் அதிகம் பாதித்திருந்தது மருத்துவ ஆய்வுகளின் மூலம் தெரிய வந்தது.

இதனால் முதியவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை தங்களுடன் வயோதிபர் இல்லங்களுக்கு எடுத்து செல்லவும், முதியோர் இல்லத்தில் இருப்பவர் புதிதாய் செல்லப்பிராணிகளை வாங்குவதற்கும் அரசு கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பச்சை கொடி காட்டியுள்ளது.

இது குறித்து வயோதிபர் இல்லங்களுக்கு பொறுப்பான மனவள நிபுணர் Jean-Christophe அவர்கள் தெரிவிக்கையில் "மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கை இது, வயோதிபர் இல்லத்தில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருக்கவும், அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கையில் இதனால் தொடர்பு படுத்தவும்  அனுமதிக்கிறது, இது இடைவெளியைத் தவிர்க்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது என தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்