Paristamil Navigation Paristamil advert login

4 முறை தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட போர்த்துகல் உச்ச நட்சத்திரம்

4 முறை தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட போர்த்துகல் உச்ச நட்சத்திரம்

2 பங்குனி 2024 சனி 09:03 | பார்வைகள் : 5159


கடந்த வாரம் ஆத்திரமூட்டும் சைகை காரணமாக போர்த்துகல் உச்ச நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தடை விதிக்கப்பட்டதுடன் அபராதமும் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ரொனால்டோவின் இந்த விவாத நடவடிக்கைகள் புதிதல்ல. இதுவரை நான்கு முறை அவர் விவாதங்களில் சிக்கியுள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் அவர் இரண்டாவது முறை இணைந்த போது, ரசிகர் ஒருவரின் அலைபேசியை சேதப்படுத்தினார்.

கால்பந்து சங்கம் அதைத் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்ததுடன், அவருக்கு மிகப்பெரிய அபராதமும் விதித்தது. உலகக் கிண்ணம் தகுதிச் சுற்றில் அயர்லாந்துக்கு எதிராக தனது இரண்டாவது கோலை அடித்த பிறகு, சட்டை அணியாத கொண்டாட்டத்தைத் தொடர்ந்து ரொனால்டோவுக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டது.

Supercopa de Espana தொடரின் போது பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது மஞ்சள் அட்டை பெற்று, அதே ஆட்டத்தில் சிவப்பு அட்டை அளித்து வெளியேற்றப்பட, கோபத்தில் நடுவரை எட்டித்தள்ளினார்.

இதனையடுத்து ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் அவருக்கு அபராதம் மற்றும் நான்கு போட்டித் தடை மற்றும் சிவப்பு அட்டைக்காக ஒரு விளையாட்டு இடைநீக்கத்தை வழங்கியது.

Cordoba அணிக்கு எதிரான ஆட்டத்தில் Edimar என்ற வீரரை எட்டி உதைக்க, நடுவரால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு இரண்டு ஆட்டங்களில் களமிறங்க தடை விதிக்கப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்