வறுமையின் கோர பிடியில் மக்கள்! உலகின் மிகவும் ஏழ்மையான நாடு
2 பங்குனி 2024 சனி 09:27 | பார்வைகள் : 2111
படுமோசமான நிலையில் வாழும் மக்கள் அதிகம் வசிக்கும் நாடாக புருண்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சிறிய நாடு புருண்டி (Burundi).
இங்கு சுமார் 1,20,00,000 மக்கள் (12 மில்லியன்) வாழ்கிறார்கள்.
ஆனால் 85 சதவீத மக்கள் வறுமையால் வாடுகின்றனர்.
விவசாயத்தை நம்பி வாழும் இம்மக்களின் ஒருநாள் ஊதியம் 50க்கும் குறைவு என்று கூறப்படுகிறது.
இதன்படி கணக்கிட்டால் ஆண்டுக்கு 180 டொலர்கள் (14,000 ரூபாய்) தான் இந்நாட்டு மக்கள் சம்பாதிக்கின்றனர்.
இங்கு வாழும் மக்களில் 3 பேரில் ஒருவருக்கு வேலை இல்லை.
ரூஹி சென்னட் என்ற யூடியூப் சேனல் வாயிலாக இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.
பிரித்தானியா, அமெரிக்காவிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் நல்ல நிலையில் இருந்த புருண்டி, 1996ஆம் ஆண்டு முதல் மோசமான நிலைக்கு சென்றது.
1996 முதல் 2005ஆம் ஆண்டுவரை அங்கு நடந்த இனக்கலவரம் மில்லியன் கணக்கான உயிர்களை பலிவாங்கியதால், அந்நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்தது.
இந்த நிலையில் தற்போது புருண்டி உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
புருண்டியைப் போலவே மடகாஸ்கர், சோமாலியா உள்ளிட்ட நாடுகளும் வறுமையில் போராடி வருகின்றன.