Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கடுமையான வெப்பம் - மக்களுக்கு ஆலோசனை

இலங்கையில் கடுமையான வெப்பம் - மக்களுக்கு ஆலோசனை

2 பங்குனி 2024 சனி 11:51 | பார்வைகள் : 7729


அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் . 

அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது என ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் போஷாக்கு நிபுணர் வைத்தியர்  ஜானக மாரசிங்க தெரிவித்தார். 

இதேவேளை, வடமேல், மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வெப்ப சுட்டெண் ஆலோசனை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பணியிடங்களில் பணிபுரிபவர்கள் அதிக நீரை அருந்துதல், அடிக்கடி நிழலில் ஓய்வெடுத்தல், நீரேற்றத்துடன் இருத்தல் முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், முதியோர்கள் மற்றும் சிறுவர்களை அவதானத்துடன் பாதுகாத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் நீரேற்றமாக இருக்க முன்னுரிமை கொடுக்குமாறும், வெள்ளை அல்லது வெளிர் நிறங்களில் இலகுரக ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்