Paristamil Navigation Paristamil advert login

விக்னேஷ்சிவன் -நயன்தாரா பிரியப் போகிறார்களா?

விக்னேஷ்சிவன் -நயன்தாரா பிரியப் போகிறார்களா?

2 பங்குனி 2024 சனி 14:41 | பார்வைகள் : 1319


சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. தனது சினிமா கரியரில் காதலால் பல சர்ச்சைகளை சந்தித்தவர். இந்தக் காதல் சர்ச்சைகளால் மனம் நொந்து போனவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், சிறிது காலம் கழித்து அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க நுழைந்தார். தோல்விகள் இருந்தாலும் பல வெற்றிப்படங்களையும் கொடுத்தார்.

அந்த சமயத்தில் தான் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. ஐந்து வருடங்களுக்கும் மேலான லிவ்-இன் ரிலேஷன்ஷிப் கடந்து 2022ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

வாடகைத் தாய் மூலம் உயிர்-உலக் என்ற இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார் நயன்தாரா. குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களையும் அவர்களுடனான கியூட் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தொடர்ச்சியாகத் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு ‘ஜவான்’ படம் மூலம் சென்றார். இந்தப் படமும் ரூ. 1000 கோடி வசூல் செய்தது. படங்களில் நடிப்பது மட்டுமல்லாது பல பிசினஸ்களிலும் முதலீடு செய்துள்ளார் நயன்தாரா.

இதற்கெல்லாம் காரணம் தனது கணவர்தான் என்று சொல்வார். பொது இடங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தன் கணவர் மீதான காதலை வெளிப்படுத்தி வரும் நயன்தாரா, திடீரென்று இன்று தனது கணவரின் ஐடியை சமூகவலைதளத்தில் இருந்து அன்ஃபாலோ செய்திருக்கிறார்.

மேலும், ’என்ன கிடைத்ததோ அதைக் கொண்டு அவள் கண்ணீருடன் எப்பொழுதும் பயணப்பட்டுக் கொண்டே இருப்பாள்’ என்ற கேப்ஷனையும் பகிர்ந்திருந்தார். இந்த விஷயங்கள் எல்லாம் சேர்த்துதான் விக்கி- நயன் விவாகரத்தா, இருவரும் பிரியப் போகிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்பொழுது மீண்டும் விக்னேஷ்சிவனை பின் தொடர ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. விக்னேஷ்சிவனும் நயன்தாரா புகைப்படத்துடன் கூடிய அவார்டு அறிவிப்பு ஒன்றைப் பகிர்ந்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்