WhatsApp-ல் Delete செய்த Message-களை பார்ப்பது எப்படி..?
3 பங்குனி 2024 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 2263
WhatsApp-ல் அனுப்பும் சில செய்திகளை Delete செய்வதற்கு பல காரணங்கள் இருக்கும்.
சிலர் தவறுதலாக செய்திகளை பிறருக்கு அனுப்பியிருக்கலாம்.இல்லையெனில், வேறு ஏதேனும் காரணத்தினால் செய்திகளை Delete செய்து விடுவர்.
சில நேரங்களில், நீக்கப்பட்ட செய்திகளை அனைத்தையும் படிக்க நமக்கு ஆர்வம் ஏற்படும். எனவே, டெலிட் செய்யப்பட்ட Message-களை மீட்டெடுக்க விரும்புவோம்.
ஆனால் Google Play ஸ்டோரில் மட்டுமே அதற்கான செயலிகள் உள்ளன. அவை டெலிட் செய்யப்பட்ட செய்திகளை மீட்டெடுக்கவும் அவற்றை மீண்டும் படிக்கவும் அனுமதிக்கின்றன.
டெலிட் செய்யப்பட்ட WhatsApp செய்திகளை மீண்டும் மீட்டெடுக்க யூசர்களை அனுமதிக்கும் Notisave என்ற செயலி Google Play ஸ்டோரில் கிடைக்கிறது.
சுவாரஸ்யமாக இந்த செயலி வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க மட்டும் உதவாது. டெலிட் ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் GIF களை மீட்டெடுக்கவும் உதவுகிறது.
1. முதலில் Android mobile-ல் உள்ள Google Play Store-ல் Notisave என்ற செயலியை Download செய்யவேண்டும். இந்த செயலி, iOS யூசர்களுக்கு கிடைக்காது.
2. தேவையான விவரங்களுடன் செயலியில் உள்நுழையவும்.
3. பின், WhatsApp Icon-ஐ காட்டும் Notisave செயலியின் முகப்புத் திரைக்குச் செல்லவும்.
4. அதில் WhatsApp Icon-ஐ தேர்ந்தெடுத்து, Delete செய்யப்பட்ட அனைத்து செய்திகளையும் நீங்கள் காணலாம்.
5. மேலும் ஒரு குறிப்பிட்ட contact-ஐ மட்டும் காண Notisave செயலி அனுமதிக்கிறது. அதற்கு பில்டர் contact-ஐ ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
முக்கியமான விஷயம் என்னவென்றால் Notisave செயலி விளம்பரங்களுடன் வருகிறது மற்றும் இது பாதுகாப்பான பயன்பாடு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, நீங்கள் செயலியை பயன்படுத்த விரும்பினால், அதன் அபாயங்களை அறிந்து கொண்டு உங்கள் சொந்த முயற்சியில் பயன்படுத்த வேண்டும்.
இதுபோன்ற 3-ம் தரப்பு செயலிகளில் சில நேரங்களில் தீம்பொருள் உள்ளது, எனவே பயன்பாட்டிற்குள் காட்டப்படும் சீரற்ற இணைப்புகளில் செல்வதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.