பரிசில் இரு வேறு இடங்களில் தாக்குதல்! - மூவர் படுகாயம்!

3 பங்குனி 2024 ஞாயிறு 19:37 | பார்வைகள் : 12950
பரிசில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் மூவர் காயமடைந்துள்ளனர்.
முதலாவது சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Gare du Nord நிலையத்துக்கு மிக அருகில், rue du Faubourg-Saint-Denis வீதியில் வைத்து நபர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் தாக்குதலாளி அவரிடம் இருந்து சில பொருட்கள் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது சம்பவம் அதிகாலை 2.30 மணி அளவில் Porte Saint-Denis அருகே இடம்பெற்றது. தாக்குதலாளி ஒருவர், வீதியில் சென்ற இருவரை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டு அவர்களிடம் கொள்ளையிட்டுள்ளனர். கத்தி மூலம் தாக்குதல் மேற்கொண்டதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025