இஸ்ரேலின் சரமாரியான தாக்குதல் - காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

4 பங்குனி 2024 திங்கள் 13:14 | பார்வைகள் : 8289
இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் கடந்த ஒக்டோபர் தொடங்கி சுமார் 5 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மக்கள் உணவு நீர் இன்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில் போரை நிறுத்துவதற்கு கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் சமரச முயற்சி செய்தன.
போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தநிலையில் காசாவை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகினர்.
மேலும் 177 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
அதேவேளை இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 410 ஆக உயர்ந்ததுடன் இதுவரை சுமார் 71 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்ததாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.