ஹமாஸ் தலைவரின் அதிரடி அறிவிப்பு...
4 பங்குனி 2024 திங்கள் 14:00 | பார்வைகள் : 4925
காசா மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தி வருகின்றது.
அதாவது ஹமாசை அழித்து காசாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தே தீருவோம் என்று ஒருபக்கம் இஸ்ரேல் முடிவெடுத்து இருக்கின்றது.
இந்நிலையில் காசாவில் ஹமாஸ் இன்னும் பலத்துடன்தான் இருக்கின்றது என்கின்றதான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் காசாவுக்கான ஹமாசின் தலைவர் Yahya Sinwar.
'இஸ்ரேல் படைகள் எங்கு வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோமோ, அங்கு தற்பொழுது வரவளைக்கப்பட்டுள்ளார்கள். ஹமாசின் Al-Qassam Brigades அனைத்துவிதமான தயார்படுத்தல்களுடன்தான் நின்றுகொண்டிருக்கின்றோம் என்றும் அவர் ஹமாசின் சர்வதேசத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஹமாஸ் தலைவர் Yahya Sinwarஇன் இந்தச் செய்தியில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது?
உண்மையிலேயே காசாவில் ஹமாஸ் அமைப்பு பலத்துடன்தான் நின்றுகொண்டிருக்கின்றதா?
காசாவின் ரப்பா பகுதிக்குள் நுழையும் இஸ்ரேலியப் படைகளைத் தடுத்துநிறுத்தும் வல்லமை ஹமாசுக்கு இருக்கின்றதா? என்பது பற்றி கேள்வி பல உலக நாட்டு தலைவர்களிடம் சர்ச்சையாக எழுந்துள்ளது.