Paristamil Navigation Paristamil advert login

மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது சாந்தனின் உடல்

மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது சாந்தனின் உடல்

4 பங்குனி 2024 திங்கள் 15:08 | பார்வைகள் : 4214


சாந்தனின் புகழுடல் சற்று முன்னர் எள்ளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சாந்தன் இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் திடிரென உயிரிழந்திருந்தார்.

சாந்தனின் உயிரிழப்பு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தழிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக உயிரோடு வருவாரேன எதீர்பார்த்திருந்த நிலையில் உயிரிழந்த நிலையில் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு இடங்களிலும் மக்கள் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்