'பாகற்காய்' கிரேவி..
4 பங்குனி 2024 திங்கள் 15:23 | பார்வைகள் : 1800
கசப்பு தன்மையே தெரியாமல் எப்படி சுவையான கிரேவியாக செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க…
இந்த பாகற்காய் கிரேவியை நீங்கள் சூடான சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 1
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
புளி - சிறிய எலும்பிச்சை அளவு
பூண்டு - 20
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள பாகற்காயை போட்டு வதக்கவும்.
பிறகு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
பாகற்காய் நிறம் மாறி நன்கு வறுபட்டவுடன் அதை வெளியே எடுத்து தட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதே கடாயில் மீதமுள்ள சூடான எண்ணெய்யில் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு கொள்ளவும்.
அனைத்தும் பொரிந்தவுடன் அதில் பூண்டு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
இதற்கிடையே மிக்ஸி ஜாரில் தக்காளியை சேர்த்து விழுது போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சமைக்கவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் சமைக்கவும்.
இது ஓரளவிற்கு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள பாகற்காயை போட்டு கலந்துவிட்டு தேவையென்றால் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
தற்போது கடாயை மூடி 15 நிமிடங்களுக்கு சமைக்கவும். இடையிடையே மூடியை திறந்து கலந்துவிட்டு கொள்ளவும்.
15 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து பார்த்தால் பாகற்காய் கிரேவி பரிமாற்ற தயாராக இருக்கும்.