Paristamil Navigation Paristamil advert login

தக்காளி கடத்தலை ஊக்குவிக்கும் சீனா

தக்காளி கடத்தலை ஊக்குவிக்கும் சீனா

15 ஆடி 2023 சனி 10:55 | பார்வைகள் : 6414


இந்தியாவில் தக்காளி ‘டிமாண்ட்’ அதிகமாக இருப்பதால், தக்காளி கடத்தலை ஊக்குவிக்கும் வகையில் சீனா ெசயல்பட்டு வருகிறது. அதனை தடுக்க இந்திய – ேநபாள எல்லையில் வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்திய – நேபாள எல்லையை ஒட்டியுள்ள இந்திய மக்கள் (பீகார், சிக்கிம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம்), சீனாவில் இருந்து வரும் தக்காளியின் சுவையை ருசிக்க துவங்கியுள்ளனர்.

இந்திய – நேபாள எல்லையின் சீமாஞ்சல் பகுதியான நோ மேன்ஸ் லேண்ட் வழியாக, சீனாவில் இருந்து நேபாளத்திற்கு சப்ளை செய்யப்படும் தக்காளிகள், அங்கிருந்து கடத்தப்பட்டு இந்தியாவிற்குள் சப்ளை செய்யப்படுகிறது. நேபாளத்தில் சீன தக்காளியின் விலை நேபாளி ரூபாயின் மதிப்பில் நூறு ரூபாய்க்கு ஐந்து கிலோ கிடைக்கிறது. அதே பூர்னியாவின் குஷ்கிபாக் மண்டியில் தக்காளியின் விலை கிலோ நூறு முதல் நூற்றைம்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து, அராரியா மாவட்டத்தில் உள்ள புல்காஹா எல்லைக்கு அருகில் உள்ள இந்திய-நேபாள எல்லையில் வசிக்கும் மக்கள் கூறுகையில், ‘இந்தியாவில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், இந்திய – நேபாள எல்லைப் பகுதிகளில் எல்லைக் காவல்படையின் தீவிர கண்காணிப்பையும் மீறி நேபாளத்தில் இருந்து சீன தக்காளிகள் கடத்தப்படுகின்றன. அவை இந்திய எல்லையோர மாவட்டங்களில் விற்கப்படுகின்றன. சீனாவில் இருந்து அனுப்பப்படும் தக்காளி, நேபாளத்தில் கிலோ ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. அதேநேரம் எல்லைப் பகுதிகளில் உள்ள சந்தையை சீனா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்தப் பகுதியில் இந்தியப் பொருட்களுக்கான தேவை எது அதிகமாக இருக்கிறதோ, அவற்றை நேபாளம் மூலம் சப்ளை செய்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்