Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது - ராசா

தி.மு.க., இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது  -  ராசா

5 பங்குனி 2024 செவ்வாய் 02:28 | பார்வைகள் : 2729


தேர்தலுக்கு பிறகு தி.மு.க., இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது; இந்தியா இல்லையென்றால் தமிழகம் தனியாக போய்விடும் என திமுக எம்.பி., ஆ.ராசா பேசியுள்ளார்.</p><br><p>தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக.,வும், காங்கிரசும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள். திமுக.,வை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது என பிரதமர் மோடி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த நிலையில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.பி., ஆ.ராசா பேசியதாவது: 

தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது... ஜாக்கிரதை.. என்ன விளையாடுறீங்களா.. நான் இந்தியா இருக்காது என்று விளையாட்டுக்கு சொல்லவில்லை. பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால் இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழகம் தனியாக போய்விடும்.

இதை விரும்புகிறதா இந்தியா என்பதை கேட்டு சொல்லுங்கள்.. நீங்கள்(பா.ஜ.,) ஊழலே செய்யவில்லை என்றால் உங்கள் ஆட்சிக்கு அதானியும், மற்றவர்களும் ரூ.6,500 கோடி ரகசியமாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த நிறுவனங்களுக்கு நீங்கள் என்னென்ன அனுகூலம் செய்தீர்கள்? மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக இருக்காது என்கிறார். நான் சொல்கிறேன், திமுக 40 இடங்களிலும் வெற்றி பெற்று மத்திய அரசை மாற்றினால் மோடி ஜெயிலுக்கு போவார். இவ்வாறு அவர் பேசினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்