பரிஸ் : மாணவன் மீது பலர் இணைந்து தாக்குதல்! - கத்திக்குத்து!

5 பங்குனி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 10555
16 வயதுடைய மாணவன் ஒருவரை பல்வேறு மாணவர்கள் இணைந்து தாக்கியுள்ளனர். சுத்தியல் ஒன்றினால் தாக்கியும், கத்தியால் குத்தப்பட்டும் தாக்கப்பட்டுள்ளார்.
பரிஸ் 4 ஆம் வட்டாரத்தின் rue Pavée வீதியில் இச்சம்பவம் நேற்று மார்ச் 4, திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனை சுற்றி வளைத்த அதே வயதுடைய மாணவர்கள், தாக்குதல் மேற்கொண்டனர். கண்மூடித்தனமாக தாக்குதலில் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
பின்னர் சிறுவன் மீட்கப்பட்டு 13 ஆம் வட்டாரத்தின் Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.