’இந்தியன்2’ படத்துக்கு மீண்டும் சிக்கல்...
5 பங்குனி 2024 செவ்வாய் 06:18 | பார்வைகள் : 11291
சட்டவிரோதமாக ’இந்தியன்2’ படக்காட்சிகளை சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளதால் படக்குழுவுக்கு சிக்கல் வந்துள்ளது. இதனால், இவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன்2’. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத், சித்தார்த் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால் அதன் படப்பிடிப்பும் தற்போது நடந்து வருகிறது.
சமீபத்தில், சென்னையில் திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரிய வீட்டுச் சுவர்களில் இந்தியன் தாத்தா ஓவியங்கள் வரையப்பட்டு படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இங்கிருந்துதான் படக்காட்சிகளை சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் உலவ விட்டிருக்கின்றனர்.
இதனால் அதிருப்தி அடைந்த ‘இந்தியன்2’ படக்குழு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா சார்பாக இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், ‘இந்தியன்2’ படப்பிடிப்பு கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு அடுத்து நடிகர் கமல்ஹாசன், ‘தக் லைஃப்’, ‘கல்கி 2989 ஏடி’ ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan