Paristamil Navigation Paristamil advert login

'தக்ஃலைப்' படத்தில் இருந்து பிரபல நடிகர் விலக காரணம் என்ன ?

'தக்ஃலைப்' படத்தில் இருந்து  பிரபல நடிகர் விலக காரணம் என்ன ?

5 பங்குனி 2024 செவ்வாய் 06:26 | பார்வைகள் : 6062


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர் ஒருவர் விலகி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் - மணிரத்னம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்த ‘தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், நாசர், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகி விட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் துல்கர் சல்மான் தற்போது தமிழ் , மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்து வரும் நிலையில் 'தக்ஃலைப்' படத்திற்காக மொத்தமாக சில நாட்கள் கால்ஷீட் கேட்டதால் அவரால் கொடுக்க முடியாத நிலை இருந்ததாகவும் அதனால் தான் இந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

'தக்ஃலைப்' படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகுவது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு பதில் நானி நடிப்பார் என்று கூறப்படுகிறது . இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்