Paristamil Navigation Paristamil advert login

சிக்ஸர் அடித்து கார் கண்ணாடியை நொறுக்கிய வீராங்கனை! 

சிக்ஸர் அடித்து கார் கண்ணாடியை நொறுக்கிய வீராங்கனை! 

5 பங்குனி 2024 செவ்வாய் 07:57 | பார்வைகள் : 10509


பெண்கள் பிரீமியர் லீக் (Women's Premier League) கிரிக்கெட் போட்டயில் வீராங்கனை அடித்த சிக்ஸர் பந்தானது கார் கண்ணாடியை நொறுக்கியது.

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியானது பெங்களூருவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று பெங்களூரு மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் களமிறங்கிய மந்தனா மற்றும் எல்லிஸ் பெர்ரி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை பெங்களூரு அணி எடுத்து. இதில், அதிகபட்சமாக மந்தனா 80 ரன்களும், பெர்ரி 58 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் களமிறங்கிய வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால், 3 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், பெங்களூரு பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 19 -வது ஓவரை தீப்தி சர்மா வீசினார். அந்த ஓவரின் 5 -வது பந்தை எல்லிஸ் பெர்ரி எதிர்கொண்டு சிக்ஸர் அடித்தார்.

அப்போது, அந்த பந்து எல்லைக் கோட்டை தாண்டி சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்து கண்ணாடியை நொறுக்கியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.       

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்