ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழி-அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

5 பங்குனி 2024 செவ்வாய் 08:28 | பார்வைகள் : 7725
ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாகாணங்களில் பெய்துவரும் பேய் மழை மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு இதுவரை 39 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சமீபத்திய கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு மாகாணங்கள் மற்றும் மாவட்டங்கள் துண்டிக்கப்பட்டன. இதுவரை 30க்கும் மேற்பட்டவர்கள் மழை மற்றும் பனிப்பொழிவுக்கு காயமடைந்துள்ளனர்.
அத்துடன் பனிப்பொழிவு காரணமாக ஆயிரக்கணக்கான கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக அமைச்சரவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக 637 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் 14,000 கால்நடைகள் மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நான்கு நாட்கள் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல்களுக்குப் பிறகு சலாங் நெடுஞ்சாலை திங்கள்கிழமை பயணிகள் கார்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
இதனிடையே, கால்நடைகளை பறிகொடுத்த ஐந்து மாகாண மக்களுக்கு இழப்பீடு வழங்க 50 மில்லியன் உள்ளூர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.