Paristamil Navigation Paristamil advert login

2015ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு...!

2015ம் ஆண்டுக்கான  திரைப்பட விருதுகள் அறிவிப்பு...!

5 பங்குனி 2024 செவ்வாய் 09:37 | பார்வைகள் : 2498


கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்திற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன.

’36 வயதினிலே’ படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவுக்கு கிடைத்துள்ளது. அது மட்டும் இன்றி பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம், சிறந்த நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி, சிறந்த பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர், சிறந்த ஒப்பனை கலைஞர் சபரி கிரிசன், சிறந்த ஆண் பின்னணி குரல் கௌதம் குமார், சிறந்த பாடலாசிரியர் விவேக் ஆகிய விருதுகள் என மொத்தம் 7 விருதுகளை அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

2015 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு கிடைத்த விருதுகள் முழு விவரங்கள் இதோ:

சிறந்த படம் முதல் பரிசு: தனி ஒருவன்
சிறந்த படம் இரண்டாம் பரிசு: பசங்க 2
சிறந்த படம் மூன்றாம் பரிசு: பிரபா
சிறந்த படம் சிறப்புப் பரிசு: இறுதிச்சுற்று
பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்புப் பரிசு): 36 வயதினிலே

சிறந்த நடிகர்: ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று)
சிறந்த நடிகை: ஜோதிகா (36 வயதினிலே)
சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு: கௌதம் கார்த்திக் (வை ராஜா வை)

சிறந்த நடிகை சிறப்புப் பரிசு: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/ 36 வயதினிலே)
சிறந்த குணச்சித்திர நடிகர்: தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)
சிறந்த குணச்சித்திர நடிகை: கவுதமி (பாபநாசம்)
சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
சிறந்த கதாசிரியர்: மோகன் ராஜா (தனி ஒருவன்)

சிறந்த உரையாடலாசிரியர்: இரா.சரவணன் (கத்துக்குட்டி)
சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)

சிறந்த பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே),
சிறந்த பின்னணிப் பாடகர்: கானா பாலா (வை ராஜா வை)
சிறந்த பின்னணிப் பாடகி: கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)
சிறந்த ஒளிப்பதிவாளர்: ராம்ஜி (தனி ஒருவன்)
சிறந்த ஒலிப்பதிவாளர்: 1) ஏ.எல்.துக்காராம் 2) ஜெ.மஹேச்வரன் (தாக்க தாக்க)
சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்): கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)
சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்): பிரபாகரன் (பசங்க 2)

சிறந்த சண்டை பயிற்சியாளர்: ரமேஷ் (உத்தம வில்லன்)
சிறந்த நடன ஆசிரியர்: பிருந்தா (தனி ஒருவன்)
சிறந்த ஒப்பனைக் கலைஞர்: சபரி கிரீஷன் (36 வயதினிலே/ இறுதிச்சுற்று)
சிறந்த தையல் கலைஞர்: வாசுகி பாஸ்கர் (மாயா)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: 1). மாஸ்டர் நிஷேஸ் 2). பேபி வைஷ்ணவி (பசங்க 2)
சிறந்த பின்னணி குரல்: (ஆண்) கௌதம் குமார் (36 வயதினிலே)
சிறந்த பின்னணி குரல்: (பெண்) ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்