கனடாவில் வாகனத் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

5 பங்குனி 2024 செவ்வாய் 10:08 | பார்வைகள் : 7071
கனடாவில் வாகனத் திருட்டுச் சம்பவங்களினால் அதன் உரிமையாளர்கள் மற்றுமொரு நெருக்கடியையும் எதிர்நோக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
கார் திருட்டுச் சம்பவங்கள் குறைவடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கார் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டாலும், திருட்டுச் சம்பவங்களில் குறைவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு களவாடப்படும் வாகனங்கள் குறித்த அனைத்து விதமான கட்டணங்களையும் உரிமையாளர்கள் செலுத்த நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக காப்புறுதி கட்டணங்கள் செலுத்த நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களை பயன்படுத்தாமலேயே காப்புறுதிக் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்த நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.