Paristamil Navigation Paristamil advert login

நாட்டை பிளவுபடுத்த தி.மு.க., விருப்பம் - அண்ணாமலை காட்டம்

நாட்டை பிளவுபடுத்த தி.மு.க., விருப்பம் - அண்ணாமலை காட்டம்

5 பங்குனி 2024 செவ்வாய் 14:39 | பார்வைகள் : 2103


நாட்டை பிளவுபடுத்த தி.மு.க., விரும்புகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க எம்.பி., ஆ.ராசா,

தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது... ஜாக்கிரதை.. என்ன விளையாடுறீங்களா.. நான் இந்தியா இருக்காது என்று விளையாட்டுக்கு சொல்லவில்லை. பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால் இந்தியா இருக்காது. 

இந்தியா இல்லையென்றால் தமிழகம் தனியாக போய்விடும் என பேசியிருந்தார். இந்த வீடியோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிளவுபடுத்த தி.மு.க., விருப்பம்

இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: பிரிவினைவாத எண்ணங்களை மக்களின் மனதில் விதைப்பது தி.மு.க அரசியலின் அடித்தளமாக உள்ளது. 

லோக்சபா தேர்தலுக்கு பிறகு நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என இண்டியா கூட்டணியை சேர்ந்த தி.மு.க.,எம்.பி விரும்புகிறார். 

1963ல் புதைக்கப்பட்ட தி.மு.க.,வின் பிரசாரம் ஒருபோதும் தலைதூக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 

இண்டியா கூட்டணியை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்கள் நமது நாட்டை உடைக்க வெளிநாட்டு முகவர்களின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்