Paristamil Navigation Paristamil advert login

சென் நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு! - பல்வேறு பாதைகள் மூடப்படுகின்றன!!

சென் நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு! - பல்வேறு பாதைகள் மூடப்படுகின்றன!!

5 பங்குனி 2024 செவ்வாய் 14:40 | பார்வைகள் : 10749


சென் நதியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. சென் நதிக்கரையை அண்மித்த பல பாதைகள் மூடப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 3.93 m மீற்றர் உயரத்தை நீர்மட்டம் எட்டியுள்ளதாகவும், நாளை புதன்கிழமை காலைக்குள் அது 4 மீற்றர் உயரத்தை எட்டிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென் நதிக்கரைகளை அண்மித்த வீதிகளில் வெள்ளம் பரவியுள்ளதால் சில வீதிகள் மூடப்பட்டுள்ளன. 

முன்னதாக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென் நதியின் நீர்மட்டம் 6.10 மீற்றருக்கு உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்