காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டைகள்
5 பங்குனி 2024 செவ்வாய் 16:58 | பார்வைகள் : 13635
வட மாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு இன்று அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.
வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி 'நிலத்தை இழந்த மக்களின் குரல்' என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு நடவடிக்கை கிளிநொச்சியில இன்று இடம்பெற்றது.
இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம், கடற்படை, தொல்பொருள் திணைக்களம் என்பவற்றினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகளை இழந்த 100க்கு மேற்பட்டோர் இதன்போது அஞ்சல் அட்டையை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan