Paristamil Navigation Paristamil advert login

'அந்த தருணத்தை ஐரோப்பா நெருங்கி வருகிறது!' - ஜனாதிபதி மக்ரோன்!!

'அந்த தருணத்தை ஐரோப்பா நெருங்கி வருகிறது!' - ஜனாதிபதி மக்ரோன்!!

5 பங்குனி 2024 செவ்வாய் 17:25 | பார்வைகள் : 13030


ஐரோப்பா அந்த தருணத்தை நெருங்கி வருவதாக, இரஷ்ய-உக்ரேன் யுத்தம் தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று மார்ச் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செக் குடியரசுக்கு பயணித்திருந்த ஜனாதிபதி மக்ரோன், அங்கு வைத்தே இதனைத் தெரிவித்திருந்தார். இரஷ்யா-உக்ரேன் யுத்தம் ஐரோப்பா அளவில் நீளும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் தனது இராணுவ துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்ப தயாராகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, இரஷ்யா மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலும் விடுத்து வருகிறது. 

அதனைக் கண்டு அஞ்சத்தேவையில்லை. 'நாம் கோழையாக இல்லை என்பதை  தெரிவிக்க வேண்டும் என மக்ரோன் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவுக்கு அணு ஆயுத அச்சுறுத்தலை இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்