பரிசை சுற்றி 150 கி.மீ சுற்றுவட்டத்துக்கு தீவிர கண்காணிப்பு!!
6 பங்குனி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 18908
பரிசை சுற்றியுள்ள 150 கிலோமீற்றர் சதுர கிலோமீற்றர் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு இந்த பாதுகாப்பு பலப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கருவிகள் மூலம் வான்வழியாக இந்த பகுதி கண்காணிக்கப்பட உள்ளதாகவும், எந்த ஒரு ஆபத்தும் தவிர்க்கப்படும் எனவும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அனுமதியின்றி பறக்கும் ஆளில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதையும் தடுக்கும் எனவும், அதனை அழிக்கும் திறன் கொண்ட விமானங்களும் கண்காணிப்பில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இந்த பாதுகாப்பு நடவடிக்கை நாளைய எந்த ஒரு தாக்குதலையும் எதிர்க்கும் எனவும், வான்வழியாக வரும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan