திருத்தப்பணிகளை முடித்துக்கொண்டு சேவைகளுக்கு தயாரான RER C நிலையங்கள்!

6 பங்குனி 2024 புதன் 07:21 | பார்வைகள் : 15654
Yvelines மாவட்டத்தில் உள்ள இரண்டு தொடருந்து நிலையங்கள், திருத்தப்பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் சேவைக்கு தயாராகியுள்ளன.
Saint-Quentin மற்றும் Montigny-le-Bretonneux ஆகிய இரு நிலையங்களே மீண்டும் சேவை வழங்க தயாராகியுள்ளன. RER C மற்றும் N, U ஆகிய Transiliens சேவைகள் இயக்கப்படும் குறித்த நிலையங்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் திருத்தப்பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. நடைமேடை புனரமைப்பு, சக்கரநாற்காலிகளைப் பயன்படுத்துவோருக்கான பாதைகள், பாரம்தூக்கிகள் போன்றவை அங்கு அமைக்கப்பட்டன.
நான்கு வருட திருத்தப்பணிகளின் பின்னர் தற்போது மீண்டும் இவ்விரு நிலையங்களுக்கும் சேவைக்குத் திரும்பியுள்ளன. €55 மில்லியன் யூரோக்கள் செலவில் இத்திருத்தப்பணிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025