யாழில் பேருந்திற்கு காத்திருந்த குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

7 ஆவணி 2023 திங்கள் 09:59 | பார்வைகள் : 9745
யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்ல இருந்த குடும்பப்பெண் ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் அவர் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த ஜூலை 20ஆம் திகதி மீசாலை பகுதியில் இருந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.
இதன்போது வவுனியாவில் இருந்து வந்த கார் ஒன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதி, அதன்பின்னர் அருகில் நின்ற மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது முறிந்த மரமானது அங்கு பேருந்துக்காக காத்திருந்த பெண்மணியின் மீது விழுந்தது.
இந்நிலையில் படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீசாலை கிழக்கு, மீசாலை பகுதியை சேர்ந்த மகேஷ்வரன் நவரஞ்சிதம் (வயது 56) என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1