உலகளவில் முடங்கிய முக்கிய சமூக ஊடகங்கள் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

6 பங்குனி 2024 புதன் 08:05 | பார்வைகள் : 4960
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு நேற்று 5 ஆம் திகதி முடங்கியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான பயனர்களால் இரண்டு மணிநேரத்திற்கு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றிபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று முடங்கியுள்ளது.
அனைவரது கணக்குகளும் தானாகவே LogOut ஆனதால் பயனாளர்கள் குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.
பேஸ்புக், இன்ஸ்டா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் செயலியும் சற்று தடுமாறியது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர் பெர்க் சிறிது நேரத்தில் சரியாகி விடும் என கூறியுள்ளார்.
இறுதியாக ஒரு மணிநேரத்திற்கு பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா இயல்பு நிலைக்கு திரும்பியது.
மேலும் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிழக்க காரணமாக இருந்த தொழில்நுட்ப சிக்கலை தீர்த்துவிட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.