Paristamil Navigation Paristamil advert login

 IPL தொடரில் புதிய ரோலில் எம்.எஸ்.தோனியின்...?

 IPL தொடரில் புதிய ரோலில் எம்.எஸ்.தோனியின்...?

6 பங்குனி 2024 புதன் 08:18 | பார்வைகள் : 5351


2024 ஐபிஎல் தொடரில் புதிய பங்களிப்பை செய்யவிருப்பதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.

கடந்த 2019 -ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து, அவர் விளையாடும் ஒவ்வொரு ஐ.பி.எல் சீசனிலும் இது அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 5 -வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. 

அப்போது கூட அந்த சீசன் தான் தோனிக்கு கடைசி சீசன் என்று கூறப்பட்டது.

முன்னதாக, தான் தற்போது ஓய்வு பெறவில்லை என்று தோனி அறிவித்திருந்த நிலையில் ஒரே ஒரு பதிவின் மூலம் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "புதிய ஐபிஎல் சீசனில் புதிய ரோலில் பயணிப்பதற்கு காத்திருக்க முடியவில்லை என்றும், அப்டேட்டுக்கு காத்திருங்கள் என்றும்" பதிவிட்டுள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்