அமெரிக்காவில் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து
6 பங்குனி 2024 புதன் 09:14 | பார்வைகள் : 8429
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் டெட்ராய்டு நகரில் ஒரு தொழிற்சாலையில் 5 ஆம் திகதி திடீரென தீப்பிடித்து எறிய ஆரம்பித்துள்ளது.
இந்த தீ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேகமாக பரவியது. இதன் காரணமாக தொழிற்சாலையின் குப்பை கிடங்கில் தீப்பற்றி ஆங்காங்கே வெடித்து சிதறின.
இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.
எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலிஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே அங்கு கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த தீயை அணைக்கும் பணியில் ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.


























Bons Plans
Annuaire
Scan