Paristamil Navigation Paristamil advert login

சிறைச்சாலைக்குள் பொதிகள் வீசிய இருவர் கைது!

சிறைச்சாலைக்குள் பொதிகள் வீசிய இருவர் கைது!

6 பங்குனி 2024 புதன் 11:27 | பார்வைகள் : 10080


Bois-d'Arcy (Yvelines)சிறைச்சாலைக்குள் வெளியே  இருந்து பொதிகள் வீசிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

நேற்று மார்ச் 5, செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 3 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு நபர்கள் சிறைச்சாலையின் சுற்று மதிலுக்கு வெளியே இருந்து சிறிய பொதிகள் சிலவற்றை உள்ளே தூக்கி வீசியிருந்தார்கள். 

இதனை பார்வையிட்ட பாதசாரி ஒருவர் அவசர இலக்கத்துக்கு (17) அழைத்து தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இருவரைக் கைது செய்தனர். 18 மற்றும் 24 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீசியெறிந்த பொருட்கள் தொடர்பில் விசாரானைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்