Paristamil Navigation Paristamil advert login

மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குனர் உடன் இணைகிறாரா தனுஷ்?

மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குனர் உடன் இணைகிறாரா தனுஷ்?

6 பங்குனி 2024 புதன் 11:27 | பார்வைகள் : 2360


சினிமாவில் எங்கு திரும்பி பார்த்தாலும் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பெயர் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தில் காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், ஸ்ரீநாத் பாசி காலித் ரஹ்மான், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் தமிழகத்திலும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து இதுவரை உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் வெளியான சமயத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் படத்தின் இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன்,விக்ரம், ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்கள். அந்த வகையில், சமீபத்தில் படத்தின் இயக்குனர் சிதம்பரத்தை தனுஷ் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது தனுஷ் அவருடைய இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் 54-வது திரைப்படத்தை ‘மஞ்சும்மல் பாய்ஸ்’  படத்தின் இயக்குனர் சிதம்பரம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனுஷ் தற்போது ராயன் திரைப்படத்தினை இயக்கி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 51-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்