சர்சையைக் கிளப்பும் ‘தென்மாவட்டம்’!
6 பங்குனி 2024 புதன் 13:18 | பார்வைகள் : 8391
நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மீண்டும் யுவன் ஷங்கர் ராஜாவை வம்பிழுத்துள்ளார். ”யுவன் இசைத்துறையில் பின்னடவைச் சந்தித்தபோது நாங்கள் தான் உதவினோம். ஆனால், இப்போது எங்கள் படத்திற்கு இசையமைக்க மறுக்கிறார்” எனக் கூறியுள்ளார் ஆர்.கே.சுரேஷ்.
.
ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பெயர் அடிபட்டு அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே ‘தென் மாவட்டம்’ படம் மூலம் மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இந்தப் படம் மூலமாக இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், இதில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் அனுமதி பெறாமலேயே, அவரது பெயரை போஸ்டரில் பயன்படுத்தி முதல் பார்வையை வெளியிட்டதாக பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது.
படத்தின் போஸ்டரில் தனது பெயரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த யுவன், தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தன்னிடம் யாரும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தாததால், தான் இந்த படத்தில் இசையமைக்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். யுவனுடன் ஒரு இசைநிகழ்ச்சி நடத்துவதற்கும், படத்தில் இசையமைப்பதற்காகவும் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக ஆர்.கே.சுரேஷ் இதற்கு விளக்கமளித்திருந்தார்.
இத்துடன் பஞ்சாயத்து முடிந்தது என நினைத்திருந்த நிலையில், ”யுவன் என்னுடன் ஒரு படத்தில் பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளார் என்பது உண்மை. அதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்தப் படம் ஏன் ’தென் மாவட்டம்’ படமாக இருக்க கூடாது என்பதுதான் என்னுடைய கேள்வி. ஒருவேளை யுவன் அதை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தால் நாங்கள் இமானை அணுக திட்டமிட்டுள்ளோம்.
இத்தனைக்கும் யுவன் பின்னடைவில் இருந்த போது ’தர்மதுரை’ படத்தைக் கொடுத்தேன். அவர் இசையமைத்த ‘மாமனிதன்’ பட வெளியீட்டுக்கு நானும் உதவி செய்தேன். யுவனுடைய குழு பதிலளிப்பதாகக் கூறியுள்ளது” என்றார். இவரது பதிவைப் பார்த்த ரசிகர்கள், யுவன் நன்றி மறந்தாரா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan