நேபாளத்தில் கோர விபத்து! 48 பயணிகளின் விலை

6 பங்குனி 2024 புதன் 16:13 | பார்வைகள் : 7870
நேபாள தலைநகர் காத்மண்டுவை நோக்கி 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை 06-03-2024 இடம்பெற்றுள்ளது.
தடிங் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றிற்குள் கவிழ்ந்துள்ளது.
இந்த நிலையில், ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் பலரும் நீருக்குள் மூழ்கினர்.
இதில், 5 பேர் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.
காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தனர்.
இதனால், விபத்தில் மொத்தம் 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். விபத்தில், 30 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பில் மாவட்ட காவல் துறை உயரதிகாரி கே.சி. கவுதம் கூறும்போது, சரியான சாலை வசதி இல்லாததே விபத்திற்கு காரணம் என பேருந்து சாரதி கூறியுள்ளார்.
இந்த விபத்திற்கான காரணம் பற்றி நாங்கள் விசாரித்து வருகிறோம் என கூறினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025