Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன் ராணுவம்

ரஷ்ய போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன் ராணுவம்

6 பங்குனி 2024 புதன் 16:22 | பார்வைகள் : 7218


ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.

முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டதில் இருந்து ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறது.

டிரோன் மூலம் ரஷியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

போர் தொடங்கியதில் இருந்து இரண்டு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று கருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான செர்கெய் கோட்டோவ் என்ற கப்பலை கெர்ச் ஜலசந்தி அருகே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளோம் என உக்ரைன் பாதுகாப்பு புலனாய்வு தெரிவித்துள்ளது.

அந்த கப்பல் 1300 டன் எடை கொண்டதாகும். செர்கெய் கோட்டோவ்-ஐ இதற்கு முன்னதாக தாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், தற்போது அந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது எனவும் உக்ரைன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் பின்னடைவை சந்தித்து வந்தாலும், உக்ரைன் கடந்த சில மாதங்களாக ரஷ்யாவின் போர்க்கப்பல்களை டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது.

இந்த நிலையில் இந்த தாக்குதல் கருங்கடலில் அரிதான மூலோபாய வெற்றி எனக் கருதப்படுகிறது.

கடந்த மாதம் ரஷ்யாவின் லேண்டிங் கப்பல் இதுபோன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது.

கடந்த மாதம், ரஷ்யாவின் 33 சதவீத கப்பல்களை (23 கப்பல் மற்றும் ஒரு நிர்மூழ்கி கப்பல்) செயல் இழக்க வைத்து விட்டோம் என உக்ரைன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2022 ஏப்ரல் மாதம் மோஸ்க்வா என்ற ஏவுகணை வழிகாட்டி கப்பலை ரஷ்யா இழந்தது பெரிய இழப்பாக கருதப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்